நூல்: நாடகமும் சினிமாவும்
ஆசிரியர்: ஏ.எல்.எஸ். வீரய்யா,
விலை: ரூபாய் 90/-
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம்
சிறந்த சினிமா தயாரிப்பு நிர்வாகியாக விளங்கிய இந்நூலாசிரியர், ‘சினிமாவும் நானும்’ என்ற தனது முந்தைய புத்தகத்திற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து இந்நூலை உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் நாடகத்துறையும், சினிமாத் துறையும் எப்படி உருவாகி, வளர்ச்சி பெற்றன என்ற வரலாற்றுப் பின்னணியை ஆசிரியர் இந்நூலில் தொகுத்துள்ளார். இந்நூலின் முதல் பகுதியில், 1890-களில் தமிழகத்தில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட நாடகத்துறை, எப்படி பல பரிமாணங்களைப் பெற்று வளரந்தது எங்கெங்கே, என்னென்ன நாடக சபாக்கள் தோன்றின அவை யார் யாரால் தோற்றுவிக்கப்பட்டன; அவர்களைப் பற்றிய குறிப்புகள்; அந்த நாடகங்களைப் பற்றிய சுவையான தகவல்கள்; அந்த நாடகங்களில் வரும் மறக்க முடியாத காட்சிகள்; நாடக நடிகர்களின் வாழ்க்கைப் பிரச்னைகள்; சுதந்திரப் போராட்டத்திற்கு நாடகத் துறையின் பங்களிப்புகள்… என்று பல்வேறு விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அதே போல் இரண்டாம் பகுதியில் பிரபலங்களாக விளங்கிய எஸ்.ஜி. கிட்டப்பா முதல் எஸ்.எஸ்.ஆர் வரை பலரின் வரலாற்றுக் குறிப்புகளையும் சுவையாக கூறியுள்ளார்.
ஏனைய செய்திகள்