“சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்’’ சு.பொ. அகத்தியலிங்கம், பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. பக் கங்கள் 36 விலை ரூ. 10/-
தீக்கதிரில் தொடராக வந்தது. சில திருத்தங்களுடன் நூல் வடிவம் பெற்றுள்ளது. சிங்கார வேலர் விதைத்த சிந்தனைகளை பயிலவும், முன்னெடுத்துச் செல்லவும் புதிய தலைமுறையை தூண்டிவிட செய்யப்பட்ட எளிய முயற்சி இது. மார்க்சியத்தை ஒரு உயிர் துடிப்புள்ள சமூக அறிவியலாகப் பார்த்தவர். மார்க்சியம் வெறும் பொருளாதாரப் போராட்டத்தின் சித்தாந்தம் எனும் சிந்தனையிலிருந்து விடுபட்டு விஞ்ஞானம் கற்றறிந்த வாழ்க்கைப் போராட்டமாக ஏற்றம் பெற; இம்மண்ணுக்கு ஏற்ப மார்க்சியத்தை பிசைந்து தர சிங்கார வேலர் சிந்தனை எப்படி உதவியாக, ஒளிவிளக்காக திகழ்கிறது என்பதை சுருக்கமாக ஆனால் அழுத்தமாக பதிவு செய்துள்ளது இந்நூல்.
ஏனைய செய்திகள்