| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
|
மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் : |
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : |
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
|
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]()
|
அஹிம்சை போராட்டம் மூலம் எதையும் சாதிக்கலாம் என்று உலகிற்கு நிரூபித்தவர் மஹாத்மா அவர்கள். வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று உலகிற்கு உணர்த்தியவரின் சில புகைப்படங்கள். இவருடைய “சத்யசோதனை” புத்தகம் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிக்காட்டி.
காலங்கள் பல கடந்தாலும் இன்னும் உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படும் மாமனிதர். எந்த வன்முறையிலும் இறங்காமல் ஆங்கிலேயர்களை அமைதியால் அடித்து நொறுக்கியவர். வீரன் என்பவன் கத்தியால் சாதிப்பவன் அல்ல அமைதியால் சாதிப்பவன் என்று உலகிற்கு உணர்த்தியவர்.
இன்றும் இவருடைய போராட்டங்களை “காந்தி” திரைப்படத்தில் பார்க்கும் போது கண்ணீர் எட்டி பார்க்க தவறுவதேயில்லை.
தன் நலன் கருதாது பிறர் நலனில் மட்டுமே அக்கறை காட்டிய இவர் மஹாத்மா என்று சொல்லுக்கு மிகப்பொருத்தமானவர்.
சுட்டுக் கொல்லப்பட்ட போது மகாத்மா காந்தி கடைசியாக சொன்ன வார்த்தைகள் என்ன
என்று ஆராய்ச்சி இப்போது நடக்கிறது.
அவர் “ராம்,ராம்” என்று அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார் என்று
போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் “ஹே! ராம்” என்று சொன்னதாகத்தான் இதுவரை
பரவலாகக் கூறப்பட்டுவந்தது.
காந்தியின் படுகொலை பற்றி தில்லியில் துக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் பதிவு
செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இப்போதும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
உருது மொழியில் அந்த எப்.ஐ.ஆர். எழுதப்பட்டுள்ளது
காந்தி சுடப்பட்டதை நேரில் பார்த்த நந்தலால் மேத்தா என்பவர் கொடுத்த
வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த எப்.ஐ.ஆர். எழுதப்பட்டுள்ளது.
1948 ஜனவரி 30-ம் தேதி காந்தி கொல்லப்பட்டார். பிர்லா இல்லத்தில் இருந்து
பிரார்த்தனைக்காக அவர் வெளியே வந்தபோது, நாதுராம் கோட்சே என்பவர்,
கைத்துப்பாக்கியால் காந்தியை 3 முறை சுட்டார். காந்தியின் வயிற்றிலும்
மார்பிலும் குண்டுகள் பாய்ந்தன. மாலை 5.10 மணிக்கு அவர் கொல்லப்பட்டார்.
பத்திரிகையாளர் தயாசங்கர் சுக்லா, காந்தி பற்றி எழுதிய புத்தகம் விரைவில்
வெளிவரவுள்ளது. காந்தி சுடப்பட்ட போது அவரது பேத்தி மனு அருகில் இருந்தார்.
தன் உடம்பில் குண்டு பாய்ந்தவுடன் வலியால் துடித்த காந்தி, “ஹே! ரா.. ” என்று
கூறியதைக் கேட்டதாக மனு கூறியதாக அந்த புத்தகத்தில் சுக்லா எழுதியிருக்கிறார்.
காந்தியை சுட்டவுடன் அவர் “ஆ” என்று அலறினார்; “ஹே ராம்” என்று சொல்லவில்லை என
அவரைக் கொன்ற கோட்சேவும் கூறியிருக்கிறார்.
குண்டு பாய்ந்த சிறிது நேரத்தில் காந்தி உயிர் துறந்தார். கொலைகாரன் கோட்சே
உடனே கைது செய்யப்பட்டார்.
நன்றி – தினமணி –
“ஹே ராம்…ராம், ராம்…ஆஹ்…!” கடந்த 1948 ம் ஆண்டு ஜனவரி 30 ம் தேதி மாலை
5.10 மணிக்கு, டில்லி பிர்லா பவனில் நாதுராம் கோட்சே சுட்டபோது, மார்பில்
குண்டு பாய்ந்து சரிந்தபடி, மகாத்மா காந்தி சொன்னது, இவற்றில் எந்த வார்த்தை
என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.
நாதுராம் சுட்டபோது, “ஹே ராம்” என்று சொல்லி ரத்த வெள்ளத்தில் காந்தி
சரிந்தார் என்று தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில், காந்தி பற்றிய
வெளிவந்துள்ள ஒரு புத்தகத்தில், அவர் “ராம்…ராம்” என்று தான் சொன்னார் என்று
எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. காந்தியின்
தனிச்செயலராக இருந்தவர் கல்யாணம்; வயது 84. சென்னையில் இவர் வசித்து வருகிறார்.
காந்தி சுடப்பட்டபோது, அவருக்கு பின்னால் கல்யாணம் நின்றிருந்தார்.
காந்தியை சுட்டபோது, அந்த இடத்தில் நடந்த விஷயங்கள் குறித்து கல்யாணம்
கூறியதாவது:- காந்தியின் இரு பக்கத்திலும், வழக்கம் போல, மனு மற்றும் அபா
காந்தி உடன் வந்தனர். அவருக்கு பின்னால், இடதுபக்கம், அவருக்கு அருகில் நான்
வந்து கொண்டிருந்தேன். காந்தியை நாதுராம், துப்பாக்கியால் அடுத்தடுத்து
சுட்டான். மார்பில் குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த
காந்தியால் பேச முடியவில்லை. அவர் எந்த வார்த்தையையும் சொல்லவில்லை. அவரை
பார்க்க கூடியிருந்த கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் தான், “ஹே ராம்” என்று
கத்தியிருக்க வேண்டும். ஆனால், காந்தி வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட
வரவில்லை. நாதுராம் கோட்சே, துப்பாக்கியை நீட்டியபடி காந்திக்கு முன்னால் வெகு
அருகில் நின்று நேரடியாக அவர் மார்பில் சுட்டார். காந்தி மார்பில் குண்டுகள்
பாய்ந்தன. அவர் இடது பக்கம் நின்று சுட்டிருந்தால், காந்தியை துளைத்த
குண்டுகள், என்னையும் துளைத்து நானும் இறந்திருப்பேன்.
பிர்லா அரங்கில், வழக்கமான பிரார்த்தனையை முடித்துக்கொண்டு, தன்
பேரப்பிள்ளைகளுடன் வெளியே வந்தார் காந்தி. அரங்கின் வெளியே வளாகத்தில், அவரை
பார்க்க 200 பேர் கூடியிருந்தனர். அவர்களில் ஒருவராக கோட்சே இருந்தார்.
காந்திக்கு பணிவது போல தலையை குனிந்து, அடுத்த நொடியே, காந்தியை நோக்கி
சுட்டார். ஆனால், காந்தி கொலை தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட விசாரணை
கமிஷன், அவர் அருகே இருந்த யாரையும் அழைத்து பேச அக்கறை காட்டவே இல்லை. காந்தி
சுடப்பட்ட நாளில் இருந்து, இன்று வரை, யாரை பார்த்தாலும், இந்த விஷயம் குறித்து
பேச்சு வந்தால், “காந்தி, ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை” என்பதை சொல்லி
வருகிறேன். ஆனால், இது பற்றி தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.
நான் சொன்னதை யாரும் கேட்பதாக இல்லை. தன் தாத்தாவை துஷார் காந்தி பார்த்தது
கூட இல்லை. அப்படியிருக்க, காந்தி சுட்டுக்கொல்லப்படும் தறுவாயில், “ஹே ராம்”
என்று சொன்னார் என்று எப்படி சொல்ல முடியும்? “நான் இறக்கும் தறுவாயில்
ராமபிரான் பெயரைச் சொல்லி இறக்க வேண்டும்” என்று காந்தி அடிக்கடி
சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால், அவர் சுட்டுக்கொல்லப்படும் போது ராமபிரான்
பெயரை சொல்லவில்லை. துப்பாக்கி குண்டுகள், மார்பை துளைக்கும் போது, அவர் எந்த
வார்த்தையையும் சொல்ல முடியாத நிலையில் தான் இருந்தார். இவ்வாறு கல்யாணம்
கூறினார்.