-
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் பெருகி வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டு, நமது உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொண்டால் நோய்கள் நம்மை ஏன் வந்து அண்டப் போகின்றன?
ஆனால், காற்று மாசுபடுவதாலும், மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும் அலர்ஜி ஏற்பட்டு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பலரிடம் தலைகாட்டுகின்றன. இந்த அலர்ஜி அறிகுறிகளைப் பற்றி அறியாதவர்களிடம் ஆஸ்துமா மிக அதிகமாகவே வாலாட்டுகிறது. எனவே, ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு வேண்டும்.
ஆஸ்துமா வந்தால் என்ன செய்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. எந்த மருத்துவரை அணுகுவது என்பதுகூட தெரியாமல், பொது மருத்துவர் யாரையாவது அணுகி அவர் எழுதிக்கொடுக்கிற ஏதாவது ஒரு மருந்து உட்கொண்டு, அதன் மூலமாக பக்க விளைவுகள் உண்டாவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இப்படிப்பட்ட தடுமாற்றம் உள்ளவர்களுக்காகவே ஆஸ்துமா- அலர்ஜி சிறப்பு மருத்துவம் டாக்டர் ஆர். ஸ்ரீதரன் ஆரோக்கியமான பல தகவல்களையும், சிகிச்சை முறைகளையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். அலர்ஜி ஏன், எதற்கு, எப்படித ஏற்படுகிறது என்பதை எளிமையாக விளக்குகிறார். நோய் வந்துவிட்டால் அவற்றின் கொடுமையிலிருந்து எப்படித் தப்புவது என்ற வழிமுறைகளையும் சொல்கிறார்.
படிக்க படிக்க மருத்துவத் துறையின் பல ரகசிய முடிச்சுகள் அவிழ்கின்றன. ஆஸ்துமா, அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்தை விரும்பும் எல்லோருக்குமான புத்தகமாகவும் இது அமைந்திருக்கிறது.
-ஆசிரியர்
-
This book Alergyai Thallu Aasthumavai vellu is written by Dr.R.Sridharan and published by Vikatan Prasuram.
இந்த நூல் அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு, டாக்டர்.ஆர். ஸ்ரீதரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alergyai Thallu Aasthumavai vellu, அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு, டாக்டர்.ஆர். ஸ்ரீதரன், Dr.R.Sridharan, Maruthuvam, மருத்துவம் , Dr.R.Sridharan Maruthuvam,டாக்டர்.ஆர். ஸ்ரீதரன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.R.Sridharan books, buy Vikatan Prasuram books online, buy Alergyai Thallu Aasthumavai vellu tamil book.
|
ஆஸ்துமாவை அகற்றும் கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கரிசலாங்கண்ணி தாவரம் முழுவதுமே மருத்துவ குணம் கொண்டது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன.
எக்லிப்டால்,வெடிலோலாக்டோன்,டெஸ்மீத்தைல்,ஸ்டிக்மாஸ்டீரால்,ஹெப்டாகோசனால்,ஹென்ட்ரைஅக்கோன்டனால், போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.
கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ‘‘கண்ணிக்காணம்’’ என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.
மஞ்சள் காமாலை குணமடையும்
கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்கும் நன்மருந்து. கல்லீரல்,மண்ணீரல்,பெரிதாவதால் உள்ள அடைப்புகளைப் போக்கும். தோல்நோய்கள் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். அனைத்து வகைக் காமாலைக்கும் இம்மருந்து நம்பகமானது. சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.
ஆஸ்துமா குணமடையும்
கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். கஷாயம் கர்ப்பப்பை இரத்தப்போக்குக்குப் பயன்படும். பற்று தேள்கடிக்கு மருந்தாகும். வீக்கம் குறைக்கும். வாந்தி மருந்து, நன்மருந்து,தேனுடன் சாற்றைக் கலந்து குழந்தைகளுக்கு ஏற்படும் காற்றுக்குழாய் சார்ந்த அடைப்புகளை குணப்படுத்தலாம். விளக்கெண்ணெயோடு சேர்த்து பூச்சிகளை அகற்ற பயன்படும்.
குழந்தைகளின் சளி நீங்க
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தநோய், வயிறு பொருமல் உள்ளிட்ட நோய்களுக்கு கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிதளவுக்கு கொடுத்து வந்தால் போதுமானது. மிக விரைவில் நோய் நீங்கி ஆச்சரியப்படும் படியான பலனைக் கொடுக்கும்.
மூச்சுத்திணறல் குணமடையும்
கரிசலாங்கண்ணிச் சாறு 500 மில்லி, சுத்தமான கலப்படம் இல்லாத நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து தைலப் பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இரண்டு வேளை உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் காசம், சுவாசம், சளியுடன் கூடிய இருமல் மூச்சுத்திணறல் ஆகிய நோய்கள் நீங்கிவிடும். இத்தைலத்தை மேல் உபயோகமாகவும் பயன்படுத்த வேண்டும்.
பொன்போல ஜொலிக்கும்
கரிசாலை கிடைக்கும் போது சேகரித்துச் சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தைப் பெறும்.
தலைமுடி நன்கு வளர
கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங் கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டிவைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும். கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் தலை முடி உதிராது, இளநீரை மாறிவிடும்.
பற்கள் உறுதியடையும்
கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும். கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.
நாள்பட்ட புண் ஆற…
கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும். கரிசலாங்கண்ணியை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்தினால், அறிவு விருத்தியாகும். பொன் போன்ற மேனி உண்டாகும்.