போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

Post Marttam - போஸ்ட் மார்ட்டம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.கே.ஆர். சேதுராமன் (Dr.K.R.Sethuraman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780951
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1) வெரைட்டி ஃபாஸ்ட் புட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் சீனியர் டாக்டர் கே.ஆர்.சேதுராமன் எழுதியது' என்ற அறிமுகத்துடன், எனது ஆசிரியர் இலாகாவிலிருந்து 'ட்ரிக் ஆர் ட்ரீட்' புத்தகத்தைப் பார்வைக்கு வைத்தார்கள். புத்தகத்தின் ஒருசில பக்கங்களைப் படித்து முடிப்பதற்குள்ளேயே, எனக்குள் ஆச்சரியம் கட்டு மீறியது.
    'மருத்துவத் துறையில் இருக்கின்ற ஒருவரே, அந்தத் துறையின் அவலங்கள் பற்றி இந்தளவுக்குத் தைரியமாக வெளிப்படுத்த முடியுமா?' என்பது என் முதல் ஆச்சரியம். புரிந்துகொள்வதற்குக் கடினமான மருத்துவத் துறையின் நுணுக்கங்களை, எளிய நீதிக் கதைகளுடன் பளிச்சென விளக்கியிருந்த விதம் அதைவிட ஆச்சரியம்!

    'ஒரு பனிமலையின் நுனியளவுதான் இந்தப் புத்தகத்தில் டாக்டர் தொட்டிருக்கிறார். மருத்துவம் பற்றியும் மருத்துவர்கள் பற்றியும் ஒவ்வொரு குடிமகனும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ஏராளமாக அவரிடம் நிச்ச‌ய‌ம் இருக்கும். ஜூ.வி. வாச‌க‌ர்க‌ளுட‌ன் அதை அவ‌ர் ப‌கிர்ந்துகொள்ள‌த் த‌யாராக‌ இருப்பாரா?' என்று என‌க்குள் எண்ண‌ம் ஓடிய‌து.

    டாக்ட‌ர் சேதுராம‌னிட‌ம் பேசினோம். 'த‌வ‌று எங்கே ந‌ட‌ந்தாலும் அதைத் தோலுரித்துக் காட்டுவ‌தில் உங்க‌ளுட‌ன் கைகோர்த்துக் கொள்வ‌தில் ம‌ட்டில்லா ம‌கிழ்ச்சி' என்று ச‌ம்ம‌தித்தார் டாக்ட‌ர். அப்ப‌டித்தான் ஆர‌ம்ப‌மான‌து 'போஸ்ட்மார்ட்ட‌ம்' தொட‌ர்! தொட‌ரின் முத‌ல் இர‌ண்டு அத்தியாய‌ங்க‌ள் வெளியாவ‌த‌ற்குள்ளேயே, சில‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் ம‌த்தியிலிருந்து இத‌ற்குக் க‌டும் எதிர்ப்பு! 'நோயாளிக‌ளுக்கும் ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் இடையே ப‌ர‌ஸ்ப‌ர‌ ந‌ம்பிக்கை ம‌ற்றும் உற‌வை இந்த‌க் க‌ட்டுரைத் தொட‌ர் சீர்குலைத்துவிடும்' என்று க‌ண்ட‌ன‌க் குர‌ல் எழுப்பினார்க‌ள். 'இது உங்க‌ளுக்குத் தேவையில்லாத‌ வேலை' என்று டாக்ட‌ர் சேதுராம‌னிட‌ம் எடுத்துச் சொல்லி, தொட‌ரை அற்பாயுளில் முடிக்க‌ முய‌ன்ற‌வ‌ர்க‌ளும் உண்டு. உறுதி, டாக்ட‌ர் சேதுராம‌னிட‌ம் இருந்த‌தால்... தொட‌ர்ந்து அறுப‌த்தைந்து அத்தியாய‌ங்க‌ளில் 'ஆரோக்கிய‌மான போஸ்ட்மார்ட்ட‌ம்' அர‌ங்கேறிய‌து.

    'காசு கொடுத்து அனுப‌விக்கின்ற எந்த‌வொரு சேவையிலும் குறைவிருந்தால், அதுப‌ற்றித் த‌ய‌ங்காம‌ல் கேள்வி கேட்க‌லாம்' என்ற‌ நுக‌ர்வோர் விழிப்பு உண‌ர்வு, உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ர‌விவிட்ட‌ கால‌ம் இது. ஆனால், இந்தியா உள்ப‌ட‌ ப‌ல‌ நாடுக‌ளில் ம‌ருத்துவ‌ சேவை ம‌ட்டும் இத‌ற்கு விதிவில‌க்காக‌வே இருந்து வ‌ந்த‌து... வ‌ருகிற‌து! 'டாக்ட‌ர் என்ப‌வ‌ர் தெய்வ‌ம் மாதிரி... அவ‌ர் எது சொன்னாலும் செய்தாலும், அது ச‌ரியாக‌த்தான் இருக்கும்' என்ற‌ அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கையும் ந‌ம்மில் ப‌ல‌ருக்கு உண்டு.

    ம‌ருத்துவ‌ர்க‌ள் உயிர்காக்கும் தெய்வ‌ங்க‌ள் என்ப‌து முற்றிலும் உண்மைதான். ஆனால் அல‌ட்சிய‌ம், ப‌ண‌த்தாசை கார‌ண‌மாக‌, ம‌ருத்துவ‌த் துறையின் புனித‌த்துக்கே க‌ள‌ங்க‌ம் ஏற்ப‌டுத்தும் வ‌கையில், க‌றை ப‌டிந்த‌ சில‌ வெள்ளைக் கோட்டுக‌ளும் ஊடுருவ‌த் துவ‌ங்கிவிட்ட‌ன‌. ஜீர‌ணிக்க‌க் க‌டின‌மாக‌ இருந்தாலும், இதுதான் இன்றைய‌ ய‌தார்த்த‌ம்! 'பூனைக்கு யார் ம‌ணி க‌ட்டுவ‌து?' என்று ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ப‌ல‌ரும் ஏங்கிக் கொண்டிருந்த‌ நிலையில், அதை டாக்ட‌ர் கே.ஆர்.சேதுராம‌ன் இந்த‌த் தொட‌ரின் மூல‌ம் திற‌ம்ப‌ட‌ச் செய்திருக்கிறார் என்றே ந‌ம்புகிறேன்.

    அவ‌ர் க‌ட்டிய‌ ம‌ணி, க‌டைக்கோடியில் உள்ள‌ அப்பாவித் த‌மிழ‌ன் வ‌ரை எச்ச‌ரிக்கை ம‌ணியாக‌ ஒலித்து உஷார்ப‌டுத்திய‌து என்ப‌திலும் ச‌ந்தேக‌மில்லை. தொட‌ர் வெளியாகி முடியும் வ‌ரை, அன்றாட‌ம் எங்க‌ளுக்கு வ‌ந்து குவிந்த‌ பாராட்டுக் க‌டித‌ங்க‌ளே அத‌ற்கு சாட்சி. 'இது வீட்டுக்கு வீடு இருக்க‌வேண்டிய‌ ம‌ருத்துவ‌ கீதை' என்று உண‌ர்ச்சிவ‌ச‌ப்ப‌ட்ட‌ வாச‌க‌ர்க‌ளும் உண்டு.

    அந்த‌க் க‌டித‌ங்க‌ள் அளித்த‌ ஊக்க‌ம், உற்சாக‌ம் கார‌ண‌மாக‌த்தான் 'போஸ்ட்மார்ட்ட‌ம்' இன்று உங்க‌ள் கைக‌ளில் புத்த‌க‌ வ‌டிவ‌மாக‌த் த‌வ‌ழ்கிற‌து.

  • This book Post Marttam is written by Dr.K.R.Sethuraman and published by Vikatan Prasuram.
    இந்த நூல் போஸ்ட் மார்ட்டம், டாக்டர்.கே.ஆர். சேதுராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Post Marttam, போஸ்ட் மார்ட்டம், டாக்டர்.கே.ஆர். சேதுராமன், Dr.K.R.Sethuraman, Maruthuvam, மருத்துவம் , Dr.K.R.Sethuraman Maruthuvam,டாக்டர்.கே.ஆர். சேதுராமன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.K.R.Sethuraman books, buy Vikatan Prasuram books online, buy Post Marttam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஒரே வாக்கியத்தில் உடனடி மருத்துவம் - Ore Vaakiyathin Udanadi Maruthuvam

பைல்ஸ் - Piles

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

ஆரோக்கிய வாழ்விற்கு அக்குபிரஷர் - Aarokya Vaalvirku Accupressure

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum

நீரிழிவுக்கு இயற்கை மருத்துவம் - Neerilivukku Iyarkai Maruthuvam

விஷகிருமிகளை ஒழிப்போம் மருந்தின்றி வாழ்வோம் (old book rare) - Vishakirumikalai Olipoam Marunthindri Vaalvoam

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

சித்த மருத்துவம் - Siddha Maruthuvam

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும் - Udal Aarokkiyaththirku Udarpayirchchigalum Vilaiyaattugalum

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் ஓர் ஆய்வு

எளிய பச்சிலை மருத்துவம்

ஹோமியோ மருத்துவம் நோய்களும் சிகிச்சை முறைகளும் - Homeo Maruthuvam Noikalum Chikitsai Muraikalum

மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம் - Magizhchi tharum malar maruththuvam

இரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பழங்களின் மருத்துவ குணங்கள் - Palangalin Maruthuva Gunangal

இதயமே இதயமே

சரும ரோக நிவாரண மருந்துகள்

மன அழுத்தத்தை (டென்ஷனை)த் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே - Americavin Simha Soppanam Asaanjai

தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள்

சட்டம் A to Z

ஆன்மிக ஞானி ஆதிசங்கரர் - Aanmiga Gnyani Sri Ragavendrar

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் - Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91