அந்திராகம் - Anthiraagam

Anthiraagam - அந்திராகம்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: ஜி. குப்புசாமி (G. Kuppuswamy)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789384598792
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ருபினி Vamsi Books Note Book (Plain Papers - Multi Wrappers)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இத்தொகுப்பில் முக்கியமான இரண்டு கட்டுரைகளும் ஒரு திரைச்சித்திரமும் இடம்பெற்றுள்ளன. மூன்றுமே இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களுடையவை. கஸூவோ இஷிகுரோ வின் The Gourmet, BBC யில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் திரைப்படம். இஷிகுரோ பிறப்பால் ஜப்பானியர். சிறு வயதிலேயே பெற்றோர்களுடன் இங்கிலாந்தில் குடியேறிவிட்டவர். மரபான கீழைத்தேய மனதுக்கு மேலை நாட்டு கலாச்சாரம், அவர்களின் ரசனை, தேர்வு, வாழ்க்கைமுறை இவற்றோடு ஒருபோதும் இயைந்துவிட முடியாது என்பதற்கு இஷிகுரோவின் எழுத்துக்கள் உதாரணமாக இருக்கின்றன. அவருடைய பிரசித்தி பெற்ற, புக்கர் பரிசு பெற்ற The Remains of The Day வின் நீட்சியாகவே இந்த 'ருசிகர்' அமைந்துள்ளது. குந்தர் கிராஸ் ஜெர்மனியின் மனசாட்சி என்று அறியப்பட்டவர். ஹிட்லர் இழைத்த கொடுமைகளுக்காக உலகத்தின் முன்பு கூசிக் குறுகி நின்றிருந்த ஜெர்மானியர்களுக்கு குந்தர் கிராஸின் The Tin Drum பெரும் ஆறுதல் அளித்தது. ஜெர்மனியின் பாவக்கறைகளை கிராஸ் தனது படைப்புகளின் மூலம் அழித்து வந்தார். அரசியலிலும் ஈடுபட்டார். இவருடைய தேர்தல் பிரச்சாரம் ஜெர்மனியின் முதல் சோஷலிஸ்ட் தலைவரான வில்லி பிராண்ட் அதிபராவதற்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் குந்தர் கிராஸ் தனது அந்திமக் காலத்தில் ஒரு மிகப்பெரிய ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அறியாத வயதில் ஹிட்லர் எழுப்பியிருந்த தேசியவெறியில் மயங்கி நாஜி படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டதாக அவர் தன்னிச்சையாக முன்வந்து ஒப்புக்கொண்டது இந்த மகா கலைஞனின் நேர்மைக்குச் சான்றாக இருந்தது. இத் தொகுப்பில் உள்ள அவரது கட்டுரை குந்தர் கிராஸின் Peeling the Onion நூலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. 'அந்தி ராகம்' காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் சுயசரிதை நூலான 'Living to Tell the Tale நூலில் அவருடைய பெற்றோர்களின் காதல் எவ்வளவு போராட்டங்களைத் தாண்டி வெற்றி பெற்றது என்ற சுவாரஸ்யமான கதையைச் சொல்லும் பகுதி. இவை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் மொழிபெயர்த்தவை. இன்று இவற்றை வாசித்துப் பார்க்கையில் மொழிபெயர்ப்பு செயல்பாடுகளில் நான் அடைந்திருக்கும் மெலிதான மாற்றங்களை உணர முடிகிறது. சில விஷயங்களில் பிடிவாதம் அதிகரித்திருக்கிறது. சில அம்சங்களில் இளகியிருக்கிறேன். இப்போது புத்தகமாக வரும்போது சில வாக்கிய அமைப்புகளை மாற்றுவதற்கு எழுந்த இச்சையை அடக்கிக்கொண்டு அப்படியே அனுமதித்திருக்கிறேன். மொழிபெயர்ப்பு குறித்த பார்வைகள் காலந்தோறும் மாறிவருகின்றன. மொழிபெயர்ப்பாளனும் மாறிவருகிறான். மாறக்கூடாதவொன்று மூலப்படைப்புக்கும் படைப்பாளிக்கும் நேர்மையாக இருப்பது. அதில் வழுவாமல் இருக்கிறேன் என்பதே மனநிறைவு அளிப்பதாக உள்ளது. நூலாக்கம் பெறாமல் குவிந்திருக்கும் என்னுடைய பல கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை சேகரித்துத் தருவதற்கு அவர்கள் தொடர்ந்து நச்சரித்து வந்ததால்தான் என் சோம்பலை மீறி இந்நூல் வெளிவருகிறது.

  • This book Anthiraagam is written by G. Kuppuswamy and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் அந்திராகம், ஜி. குப்புசாமி அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anthiraagam, அந்திராகம், ஜி. குப்புசாமி, G. Kuppuswamy, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , G. Kuppuswamy Molipeyarppu,ஜி. குப்புசாமி மொழிபெயர்ப்பு,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy G. Kuppuswamy books, buy Vamsi Pathippagam books online, buy Anthiraagam tamil book.

ஆசிரியரின் (ஜி. குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணாடிச் சொற்கள்

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

மூன்றாவது கண்

கனவுகளுடன் பகடையாடுபவர் - Kanavugaludan Pagadaiyaadubavar

காலத்தை இசைத்த கலைஞன்

இருட்டியபின் ஒரு கிராமம்

எங்கேயும் எப்போதும் (எஸ்.பி.பி. நிலைவலைகள்)

அயல் மகரந்தச் சேர்க்கை

வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்) - Vennira Kottai (Thurukki Novel)

நாளை வெகுதூரம் - NAlai Vekuthuram Samakala Ulakas Sirukathaikal

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத் துயரமும்

தொழுகையை மீளக் கண்டடைதல்

மோகத்திலே என்னை மூழ்க வைத்து

கேலிச்சித்திர வரலாறு

சிக்கலான நூற்கண்டு - கருஞ்சிவப்பில் ஒரு புலனாய்வு

சத்தியா பாகம் - 1

பெற்றார்-பிள்ளை உறவுகள் (பிள்ளை வளர்ப்புக்கான ஒரு வழிகாட்டி)

பாட்டிசைக்கும் பையன்

ஹதீஸ் முறைமையும் கிரந்தங்களும்

40 ஹதீஸ் குத்ஸீகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெள்ளையானை (சாதா அட்டை) - Vellaiyaanai (Saathaa Attai)

தங்க ராணி - Thanga Rani

ராஜ வனம்

பச்சையும் சிவப்புமாய் ஒரு பாதாம் மரம்

கூடுகளில் தொங்கும் அங்காடிகள்

முத்தியம்மா

எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்

அம்மா

கிகோர்

அமெரிக்கன் - American

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91