தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

Theetchidar Padiya Thiruthalangal - தீட்சிதர் பாடிய திருத்தலங்கள்

வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: பரணீதரன் (Bharanitharan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760385
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சங்கீதம், சரித்திரம், சாதனை, சம்பவங்கள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
சிகரம் தொடுவோம் இன்றும் நமதே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் புனைந்து சரித்திரம் படைத்த சங்கீத சாதனையாளர்! பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விடனில் தொடர் எழுத பரணீதரன் காசியாத்திரை மேற்கொண்டபோது, தீட்சிதர் ஐந்தாண்டு காலம் காசியில் தங்கியிருந்ததைப் பற்றி அறிந்தார். அங்கு தீட்சிதர் ஆராதித்ததாகக் கூறப்படும் சிவலிங்கத்தையும் தரிசித்தார். அதன் பிறகு அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை அறிய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. விளைவு, சென்னை திரும்பியதும் அதற்கான முயற்சிகளில் முழு வீச்சில் ஈடுபட்டார். அதையொட்டி தீட்சிதர் பயணம் செய்த திருத்தலங்களை விசாரித்து அறிந்து, அந்த இடங்களுக்கெல்லாம் விஜயம் செய்தார். பின்னர் அந்தந்த இடத்தில் கிடைத்த, நம்பத் தகுந்த தகவல்களது அடிப்படையில் அவரது வாழ்க்கை வரலாற்றையும் அதையொட்டிய சம்பவங்களையும் இணைத்து விகடனில் எழுதினார். அந்தத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வைத்தீஸ்வரன் கோயிலில் ஆரம்பித்து தீட்சிதர் தரிசித்த கோயில்களுக்கு பரணீதரனுடன் நாமும் ஒரு பயணம் மேற்கொண்ட அனுபவம் இந்த நூலைப் படிக்கும்போது நமக்கு ஏற்படும். எந்தக் கோயிலில், எந்தச் சூழலில் தீட்சிதர் தமது கீர்த்தனைகளை இயற்றினார் என்ற விவரங்களுடன் அந்தந்த கோயிலின் தல புராணம், கோயில் சிறப்பு, உற்சவங்கள் மற்றும் ஐதீகங்களையும் தனக்கே உரிய தனி நடையில் அழகுபட வர்ணிக்கிறார் நூலாசிரியர். எட்டயபுரத்தில் தீட்சிதரின் இறுதி நாட்களை உணர்ச்சிபூர்வமாக விவரித்து, மீனாட்சி மே முதம் தேஹி மேசகாங்கி... என்று தொடங்கும் பூர்விகல்யாணி ராகக் கீர்த்தனையில் மீனலோசனி பாசமோசனி... என்ற வரியை சீடர்கள் பாடிக் கொண்டிருக்க... ஜகன்மாதாவின் அருளில் தீட்சிதர் ஐக்கியமடையும் காட்சியைப் படிப்பவர்களின் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் நூலாசிரியர். தீட்சிதர் பற்றிய இந்த நூல், சங்கீதம் கற்பவர்களுக்கு மட்டுமின்றி, இசை ரசிகர்கள் ஒவ்வொருவரும் படித்து, ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ள‌து!

  • This book Theetchidar Padiya Thiruthalangal is written by Bharanitharan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தீட்சிதர் பாடிய திருத்தலங்கள், பரணீதரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Theetchidar Padiya Thiruthalangal, தீட்சிதர் பாடிய திருத்தலங்கள், பரணீதரன், Bharanitharan, Muthtamil, முத்தமிழ் , Bharanitharan Muthtamil,பரணீதரன் முத்தமிழ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bharanitharan books, buy Vikatan Prasuram books online, buy Theetchidar Padiya Thiruthalangal tamil book.

ஆசிரியரின் (பரணீதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆலய தரிசனம்

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

பத்ரி. கேதார் யாத்திரை

திருத்தலப் பெருமை.தஞ்சை கோயில்கள்.1

கஸ்தூரி திலகம் - Kasthuri Thilagam

அருணாசல மகிமை

தரிசனங்கள் - Dharisanangal

ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் - Gnanapiththar Shri Seshadhri Swamigal

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

அன்பே அருளே - Anbe Arule

மற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :


புது முறைத் தமிழ் வாசகம்

மொழி வளம்

நாடக அழகியல்

தமிழ்மலை

இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்

இனியவை இரண்டு (நற்சிந்தனை நாடகங்கள்)

தமிழ்நாவல்களில் தேடலும் திரட்டலும்

கம்பனின் கவியாட்சி

சொற்களும் சுவையான விளக்கங்களும்

மறைந்துபோன தமிழ் நூல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதயம் - Ithayam

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

ஏழாம் சுவை - Ezham Suvai

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

ரஜினி முதல் பிரபாகரன் வரை

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

அலாஸ்கா - Alaska

நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91