-
வைரமுத்து வைரமா? முத்தா? வைரமும் முத்துவுமா? வைரம் பாய்ந்த முத்தா? முத்தான வைரமா?
இவற்றில் எதுவுமில்லை . இதற்கு காரணம் இது காரணப் பெயரில்லை . ஒரு சாமியின் பெயரிது.
அப்படியானால் இவர் யார்? இவர் ஒரு சிகரம். சிகரங்களை நோக்கிய சிகரம்,
ஏற்கனவே வளர்ந்த சிகரம். எனினும் வளரும் சிகரம், கவிதை, கதை இரண்டிலும்
உச்சமான இரட்டைச் சிகரம். .
வைரமுத்து வாழுங் கவிஞர், இன்னும் பல்லாண்டு வாழப் போகிற கவிஞர். அவர்
ஏற்கனவே ஒரு சிகரமாக உயர்ந்து நிற்பது மட்டுமல்ல, புதுப்புது உச்சிகளைத்
தொடவேண்டிய வளரும் சிகரமாகவும் இருக்கிறார் என்பார் அருணன்.
முதலில் 'கொஞ்சம் வைரம் கொஞ்சம் முத்து' என்று பெயர்
வைத்துப்பார்த்தார். இறுதியில் சிறு ஆலோசனைகளுக்குப் பிறகு “வளரும் சிகரம்
வைரமுத்து' என்று பெயர் மாற்றம் ஆயிற்று.
அருணன் தன் பெயரைப் போன்றே சூரியத்தாகம் கொண்ட மார்க்சிய படைப்பாளியும்
விமர்சகரும் ஆனவர், ஐந்து நாவல்கள்,) இரு சிறுகதைத் தொகுதிகள்,
பத்துக்கும் மேற்பட்ட விமர்சன நூல்கள் என ஆக்கியளித்துள்ளார். 'பிராமணியம்'
பற்றிய இவரது சமீபத்திய நூற்தொகுதிகள் குறிப்பிடத்தக்கவை. பார்வையில்
தெளிவும் படைப்புகளில் துணிவும் கொண்டவர். இவர் வைரமுத்துவின் கவிதை,
திரைப்பாடல், தொடர்கதைகள், கட்டுரைகள், பதில்கள் எனப் பல்வேறு இலக்கிய
வகைமைகளை அலசி ஆராய்ந்து தன் பாணியில் அருமையாக எழுதியுள்ளார்.
சித்தாந்த ஒருமைத் தன்மையானது கவிஞரின் எழுத்துக்களில் திராவிட இயக்கச் சிந்தனை
மார்க்சியச் சிந்தனை எனும் இரு கரைகளின் இடையே நுங்கும் நுரையுமாக பொங்கிப் பிரவாகிப்பதை இனம்கண்டு எடுத்துரைக்கிறார்.
அருணன் வைரமுத்துவிற்குள்ளே மூழ்கி முத்துக்களையும் தோண்டித் துருவி
வைரங்களையும் எடுத்துள்ளார்.இவரது கவிதைகள் பிற்போக்குத்தனமும்
புரியாமையும் கொண்ட அதிநவீன படைப்பாக இல்லாமல் மரபார்ந்து மணம்.
-
This book Valarum Sigaram Vairamuthu is written by Arunan and published by Kavya Pathippagam.
இந்த நூல் வளரும் சிகரம் வைரமுத்து, அருணன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valarum Sigaram Vairamuthu, வளரும் சிகரம் வைரமுத்து, அருணன், Arunan, Katuraigal, கட்டுரைகள் , Arunan Katuraigal,அருணன் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Arunan books, buy Kavya Pathippagam books online, buy Valarum Sigaram Vairamuthu tamil book.
|