-
சிவகங்கைச் சீமையின் சீர்மிகு ஊர்களில் சிறந்தது காளையார்கோவில்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பல பேரரசர்களை அமைத்து ஆட்சி
செய்து வந்தான் வேங்கை மார்பன் என்ற வீரன். பாண்டியன் மீது பெரும்படை
நடத்தி வந்த சோழன் பெருநற்கிழியை நெடுஞ்செழியன் வெற்றி வாகை சூடிய
காரணத்தினால், “தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்” என அவன்
போற்றப்பட்டான்.[1] இவனைப் போன்று அக நானூறு தொகுப்பித்த பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என போற்றப்பட்டான்.[2]
இந்த இரண்டு செய்திகளில் இருந்து சங்க காலத்தில் இந்த ஊருக்கு
“தலையாலங்கானம்” “கானப்பேர்” என்ற பெயர்கள் இருந்தமை தெரியவருகின்றன. ஏழாம்
எட்டாம் நூற்றாண்டுகளில் இங்குள்ள இறைவனை வழிபட்ட திருஞான சம்பந்தரும்,
சுந்தரமூர்த்தி நாயனாரும், தங்களது தேவாரங்களில் இந்த ஊரை கானப்பேர் என்றே
குறித்துள்ளனர். பாண்டி நாட்டுப் பழம்பதி பதினான்கில் ஒன்றாக
வரிசையிட்டுள்ள பழம் பாடல் ஒன்று “கானப்பேர்” என்பதனை “கானை”
எனப்பாடுகிறது.[3]
மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பாண்டிய மன்னனது
வாரிசுப்போரில் தலையிட்டு பல போர்களில் குலசேகர பாண்டியனைத் தோல்வியுறச்
செய்த இலங்கை நாட்டு ஜகத்விஜயதண்டநாயகனது ஆக்கிரமிப்பில் இந்த ஊர் சில காலம் இருந்ததை வரலாறு குறித்துள்ளது.[4]
அடுத்து பதினான்காம் நூற்றாண்டில் எழுந்த மற்றொரு வாரிசுப் போரில்
சுந்தரபாண்டியனுக்கு உதவ வந்த தில்லி தளபதி மாலிக் காபூரின் கொள்ளைக்குப்
பயந்து, திருவரங்கத்து ஸ்ரீரங்கநாதரது திருமேனியுடன் புறப்பட்டு வந்த
பிள்ளை லோகாச்சார்யருக்கு அங்கு புகலிடம் தந்ததாக மற்றுமொரு வரலாற்றுச்
செய்தி உள்ளது.[5]
இந்த நிகழ்ச்சிக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், தென்னகம் வந்த அரபு
நாட்டுப்பயணி திமிஸ்கி, இந்த ஊரை “காய்ன்” என்றும். தென்னகத்தின் சிறந்த
ஊர்களில் ஒன்று என்றும் தமது பயணக் குறிப்புகளில் வரைந்துள்ளார்.[6]
-
This book Maaveer Marudhupaandiyar is written by munaivar Es. Em. Kamal and published by Kavya Pathippagam.
இந்த நூல் மாவீரர் மருது பாண்டியர், முனைவர் எஸ்.எம். கமால் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maaveer Marudhupaandiyar, மாவீரர் மருது பாண்டியர், முனைவர் எஸ்.எம். கமால், munaivar Es. Em. Kamal , Varalaru, வரலாறு , munaivar Es. Em. Kamal Varalaru,முனைவர் எஸ்.எம். கமால் வரலாறு,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy munaivar Es. Em. Kamal books, buy Kavya Pathippagam books online, buy Maaveer Marudhupaandiyar tamil book.
|