-
உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைப்பது மிகச் சிறு பொழுதே. கிடைத்த சிறு பொழுதையும் மகிழ்வாகப் போக்குவதற்காகவே நாடகம், திரைப்படம், பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு விருந்து படைக்கின்றன. மக்களில் அதிக சதவிகிதம் பேர் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நாடுவது திரைப்படங்களைத்தான். இப்படி மக்களோடு ஒன்றிவிட்ட திரைப்படங்களின் கதையையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் மக்களிடம் எடுத்துச் செல்பவை வசனங்களே. அந்த வசனங்களே மக்களின் உணர்வுகளில் கலந்து, அவர்களை உணர்ச்சியின் பிடியில் ஆழ்த்துகின்றன.
சென்ற நூற்றாண்டில் நாடகங்கள் சுதந்திர உணர்வுக்கு வித்திடும் வகையில் செய்திகளைத் தாங்கிச் சென்றன. பின்னர், சமூக சமய முன்னேற்றத்துக்கான செய்திகளைத் தாங்கிச் செல்லும் ஊடகமாக நாடகம் திகழத் தொடங்கியது. அதன் வேராக விளங்கியதும் வசனங்களே!
பிற்காலத்தில் நாடகங்களின் அடிப்படையில் பேசும் திரைப்படங்கள் வந்த பிறகு, திரைப்பட வரலாற்றில் ஏராளமான வசனகர்த்தாக்கள் தங்கள் எழுத்துத் திறமையால் திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தார்கள்; அதன் மூலம் மக்கள் மனங்களில் கருத்துகளை விதைத்தார்கள். அப்படி மக்கள் மனங்களில் பதிந்த வசனங்களை எழுதிய வசனகர்த்தாக்களை வாசகர்கள் மனத்தில் பதியவைக்கும் ஒரு முயற்சிதான் இந்த நூல்.
எந்தப் படத்தில் எந்த வசனம் வெகு சிறப்பாகப் பேசப்பட்டது; எந்த வசனம் மக்களின் மனங்களைக் கவர்ந்தது; ஒரு சில படங்கள் வசனத்துக்காகவே ஓடிய காரணம் என்ன; எந்தப் படத்துக்கு யார் வசனம் எழுதினார்கள்; அவர்கள் எழுதிய வசனத்தால் பெற்ற சமுதாய அந்தஸ்து என்ன; பிரபலமான வசனம் உருவான விதம்; அதற்கு வசனகர்த்தா எடுத்துக்கொண்ட சிரத்தை ஆகியவற்றை இந்நூலில் படித்து அறியலாம்.
கடந்த காலத் திரைப்பட வரலாற்றில் வசனகர்த்தாக்களின் பங்கு என்ன; அன்று அவர்களுடைய வசனநடை எப்படி இருந்தது; அன்றைய வசனநடை இன்றைய திரைப்பட உலகுக்கு எந்தளவிற்குத் துணையாக நிற்கிறது? போன்ற தகவல்களை இந்நூல் தருகிறது.
-
This book Pammal muthal komal varai is written by Aranthai Maniyan and published by Vikatan Prasuram.
இந்த நூல் பம்மல் முதல் கோமல் வரை, அறந்தை மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pammal muthal komal varai, பம்மல் முதல் கோமல் வரை, அறந்தை மணியன், Aranthai Maniyan, Cinima, சினிமா , Aranthai Maniyan Cinima,அறந்தை மணியன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aranthai Maniyan books, buy Vikatan Prasuram books online, buy Pammal muthal komal varai tamil book.
|