-
1969 வாக்கில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தஞ்சை மாவட்டச் செயலாளராக முனைவர் பாரதிப் பித்தன் பொறுப்பேற்றிருந்தார். பெருமன்ற மாநிலத் தலைவர் பேராசிரியர் நா. வானமாமலை தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுப்பதற்கு முன்வருமாறு பாரதிப்பித்தனைக் கேட்டுக்கொண்டார். அப்பொறுப்பை முனைவர் அரசக்கண்ணனிடமும் என்னிடமும் பாரதிப் பித்தன் ஒப்படைத்தார். அரசக் கண்ணன் முத்துப்பேட்டை, மறமடக்கி, குளமங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து தொகுத்த பாடல்களை என்னிடம் தந்தார். குளமங்கலம் கிளைச் செயலாளர் மு. இராமநாதனின் முயற்சி இனியது: தனித்தன்மை வாய்ந்தது. நான் வாய் மேட்டில் திரட்டிய பாடல்களையும் அவற்றுடன் சேர்த்து, ஒழுங்குற எழுதி நா. வாவிற்கு அனுப்பினேன்.
பேராசிரியர் நா.வா. தார்வாரில் ஆய்வுப் பணி மேற்கொண்ட பொழுது, மேலும் பாடல்கள் தொகுத்துதவுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். தென்னடார் மு. கருணாநிதி, வாய்மேடு புலவர் ப. தவமணி வெற்றியழகன் ஆகியோர் தொகுத்தவையும் நான் திரட்டியவையுமாக ஒரு தொகுப்பினைப் பேராசிரியர்க்கு அனுப்பினேன். இதனுள் வாய்மேடு, தென்னடார், இடும்பாவனத்தைச் சுற்றியுள்ள ஊர்கள் ஆகிய பகுதியிலிருந்து கிடைத்தவை அடக்கம். இடும்பாவனம் அரசு உயர்பள்ளியின் அன்றைய மாணவர்கள் ஆர்வமுடன் என் முயற்சிக்கு ஊற்றுக்கண்ணாயிருந்தனர் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கின்றேன். தென்னடார் வை முத்து, உதயமார்த்தாண்டபுரம் அழகிரிசாமி ஆகியவர்களும் சில பாடல்களை அளித்துதவினர்.
-
This book Thanjai Naatupura Paadalgal is written by Vaaymainaathan and published by Naam Tamilar Pathippagam.
இந்த நூல் தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள், வாய்மைநாதன் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thanjai Naatupura Paadalgal, தஞ்சை நாட்டுப்புறப் பாடல்கள், வாய்மைநாதன், Vaaymainaathan, Pothu, பொது , Vaaymainaathan Pothu,வாய்மைநாதன் பொது,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Vaaymainaathan books, buy Naam Tamilar Pathippagam books online, buy Thanjai Naatupura Paadalgal tamil book.
|