-
நாம் கற்க விரும்புகிறோம். நம்மிடமுள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள
விரும்புகிறோம். தொடர்ந்து மேலே மேலே முன்னேறவும் மகிழ்ச்சியோடு வாழவும்
விரும்புகிறோம். இருந்தும், நம் லட்சியம் மாய மானைப் போல் விலகி விலகிச்
சென்றுகொண்டே இருக்கிறது. அந்த மாய மானைப் பிடிப்பதற்கு ஒரு வழிதான்
இருக்கிறது. மாயாவியாக மாறிவிடுங்கள். இந்தப் புத்தகம் அந்த மந்திரத்தை
அற்புதமாகச் சொல்லிக்கொடுக்கிறது.கற்கவேண்டும் என்று விரும்பினால்
மட்டும் போதாது; அக்கறையோடும் ஆர்வத்தோடும் எப்படிக் கற்கவேண்டும் என்பதை
நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். திறன்களை வளர்த்துக்கொள்வது முக்கியம்;
ஆனால் அதைவிட முக்கியம் உங்களுக்குள் இருக்கும் திறன்கள் என்னென்ன என்பதைக்
கண்டறிவது. மகிழ்ச்சி முக்கியம் ஆனால் எது மகிழ்ச்சி என்பது
தெரியவேண்டுமல்லவா?சுவாரஸ்யமான நடையில், ஏராளமான
எடுத்துக்காட்டுகளோடும் குதூகலமூட்டும் சிந்தனை வரைபடங்களோடும்
உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வை ஆச்சரியமூட்டும் வகையில்
மாற்றியமைக்கப் போகிறது. உடற் பயிற்சி தொடங்கி மனப் பயிற்சி வரை; அறிவியல்
தொடங்கி தியானம் வரை அனைத்தையும் புதுமையான முறையில் அறிமுகப்படுத்துவதோடு
இவற்றைக் கருவிகளாகக் கொண்டு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
எப்படியெல்லாம் வெல்லலாம் என்பதையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.
-
இந்த நூல் வெற்றிக்கு ஒரு வரைபடம், சந்திரசேகரன் கிருஷ்ணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெற்றிக்கு ஒரு வரைபடம், சந்திரசேகரன் கிருஷ்ணன், Chandrasekaran Krishnan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Chandrasekaran Krishnan Suya Munnetram,சந்திரசேகரன் கிருஷ்ணன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Chandrasekaran Krishnan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.
|