-
அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கற்பனைகள் ஏக்கங்கள்.
* கர்ப்பம் அடைவதற்கு உணவு முறையில் செய்துகொள்ள வேண்டுய மாற்றங்கள் என்னென்ன.
* கர்ப்பிணிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் அவற்றின் அவசியமும் என்னென்ன.
* கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் என்னென்ன.
* உணவை வெறுக்கவைக்கும் கர்ப்பக் கால நிகழ்வுகள் என்னென்ன.
என்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணி மட்டுமல்ல அவளுடைய கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் உள்ளடக்கியது. குழந்தைப்பேறு என்றொ ஒரு பரவசத்தை கணவன் -மனைவி இருவரும் அடைவதற்கு, என்ன மாதிரியான உணவுகளைக் கர்ப்பிணி சாப்பிட வேண்டும் என்பதை விரிவாகவும், தெளிவாகவும் விளக்கும் இந்தப் புத்தகம் , கர்ப்பம் ஆக விரும்புபவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஒரு மெனு கார்டு.
- டாக்டர் . கே. எஸ் . ஜெயராணிகாமராஜ் .
-
This book Karpinigalukkana Unavum, Unavu muraigalum is written by Dr. K.S. Jeyarani Kamaraj and published by Nalam Pathippagam.
இந்த நூல் கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும், டாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ் அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karpinigalukkana Unavum, Unavu muraigalum, கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும், டாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ், Dr. K.S. Jeyarani Kamaraj, Maruthuvam, மருத்துவம் , Dr. K.S. Jeyarani Kamaraj Maruthuvam,டாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ் மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr. K.S. Jeyarani Kamaraj books, buy Nalam Pathippagam books online, buy Karpinigalukkana Unavum, Unavu muraigalum tamil book.
|
முப்பது நாளும் உண்ணத் தகுந்த யானைக்கால் கிழங்கு
கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது சேனைக்கிழங்கு. இவை ஸ்டார்ச் செறிந்தவை என்பதால், ஈரம் நிறைந்த உஷ்ணப்பிரதேசங்களில், இக் கிழங்குகள், பரவலாக பயிரிடப்படுகின்றன. சேனை கிழங்குகள் தான் ஆப்ரிக்கா ஆசிய தென்அமெரிக்கா மற்றும் கடல் தீவுப்பிரதேசங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் முக்கியமான மாவுச்சத்து உணவு. இந்த கிழங்குகள் உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைப் போல பயன்படுத்தப் படுகின்றன. ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும் என்பதால் இதனை காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள். இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.
ஏழை மக்களின் எளிய உணவு
மேற்கு ஆப்ரிக்காவிலும் நியூகிளியிலும் சேனைகிழங்குகள் முக்கியமான வேளாண்மை பொருட்கள். கி.மு. 8000 ஆண்டுகளில் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் முதன் முதலாக பயிரிடப்பட்டன. இன்று வரை இந்த பிரதேசங்களின் ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தக்கிழங்குள் இன்றியமையாதவை. குளிர்சாதன வசதியின்றி 6 மாதம் வரை இந்த கிழங்குகளை பாதுகாக்கலாம். எனவே மழைக்கால உணவு பஞ்சத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்படுகின்றனர்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இந்த கிழங்குகளில் டயாஸ்கோரின் ஒரு ‘விஷ’ காரம் உள்ளது. ஆனால் குறைந்த அளவில் இருக்கிறது. கிழங்குகளை வேக வைத்தால் இந்த விஷம் அழிந்து விடும்.டயாஸ்கோரின் தவிர, இந்த இன கிழங்குகளில் ஸ்டீராய்டுகளான சபோஜெனிங்களும் உள்ளன. டயாஸ்கோரியா இன கிழங்குகளில், விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி – 6, பொட்டாசியம், மங்கனீஸ் சத்துக்கள் உள்ளன. கொலஸ்ட்ரால், கொழுப்புகள் மற்றும் சோடியம் குறைவு. விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி 6 – இவை ஆரோக்கியத்தை பாதுகாப்பவை.
பெண்களின் சத்து மாத்திரை
சேனைக்கிழங்கு உண்பதன் மூலம் எலும்பு அடர்த்தி குறைபாடும் ஆஸ்டியோ பெராசிஸ், இதய நோய்களும் தவிர்க்கப்படுகின்றன. பூரித கொழுப்பு குறைவாக இருப்பதும் நல்லதே. இதயம் பாதுகாக்கப்படும். உருளை ரகங்களை விட, சேனைக்கிழங்கு வகைகள் சர்க்கரை குறைந்தவை. குறைந்த கிளைசமிக் அளவுகள் உள்ளவை. நீடித்து இருக்கும் சக்தியை கொடுப்பது மட்டுமன்றி, நீரிழிவு, அதீத உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும்.
கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.
பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கில் புரதம், தாது உப்புகள், மாவுச்சத்து, வைட்டமின் ஏ, ரைபோஃபிளவின், கால்சியம், இரும்பு, தயாமின், நிகோடினிக்கும் உள்ளன. உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.
உடலை வலுவாக்கும்
குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது. இதில் உள்ள கால்சியம்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது. ‘பி’ குரூப் மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.
பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.
கால்நடைகளுக்கு உணவு
அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது. தென்அமெரிக்காவில் கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்படுவதால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன.
கர்ப்ப காலத்தில் மிகவும் உதவும் புத்தகம், இதில் உள்ள குறிப்புகளை படித்து புரிந்து கொண்டால் நிச்சயமாக கர்ப்ப கால நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவைகளில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம். எவ்வாறு உணவு பழக்கம் இருக்க வேண்டும் என்று எடுத்து கூறும் சிறந்த புத்தகம்.