-
இன்று உலகில், மற்ற எந்த நோய்களைவிடவும் மக்களை அதிகமாகப் பாதிக்கக்கூடியது ஆஸ்துமா. ஒரு நிமிடம்கூட ‘நிம்மதி’ என்ற பேச்சுக்கே இடம் தராத இந்த நோயைப் பற்றிய முழுமையான தகவல்களை எளிதில் புரியும் வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர். அந்த வகையில், ஆஸ்துமா என்றால் என்ன?
யார் யாருக்கு ஆஸ்துமா வரும்?
என்னென்ன காரணங்களால் ஆஸ்துமா வரும்?
ஆஸ்துமா நோயாளிகளுக்கான சரியான உணவுமுறை எது?
ஆஸ்துமா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்தப் புத்தகம், மற்ற எந்த மருத்துவ முறையாலும் முழுமையாகக் குணப்படுத்த முடியாத ஆஸ்துமா நோயை சித்த மருத்துவத்தால் மட்டும் எப்படி நிரந்தரமாகக் குணப்படுத்த முடிகிறது என்பதை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குகிறது.
நூலாசிரியர் டாக்டர் துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளில் 60 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். பதிவுபெற்ற அரசு மருத்துவரான இவர், மருந்து-கள் தயாரிப்பிலும் தேர்ச்சி உடையவர். 25 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுபெற்ற மருத்துவர்களை உறுப்பினராகக் கொண்ட ‘இம்ப்காம்ஸ்’ அமைப்பில், மருந்துகளின் தர நிர்ணயித்துக்கான மருந்து தயாரிப்பு அறிவுரையாளராக 1985-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவருக்கு வயது 81.
-
This book Asthma - Siddha Maruththuvam is written by Dr. Durgadoss S.K. Swamy and published by Nalam Pathippagam.
இந்த நூல் ஆஸ்துமா - (சித்த மருத்துவம்), டாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி அவர்களால் எழுதி நலம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Asthma - Siddha Maruththuvam, ஆஸ்துமா - (சித்த மருத்துவம்), டாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி, Dr. Durgadoss S.K. Swamy , Maruthuvam, மருத்துவம் , Dr. Durgadoss S.K. Swamy Maruthuvam,டாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி மருத்துவம்,நலம் பதிப்பகம், Nalam Pathippagam, buy Dr. Durgadoss S.K. Swamy books, buy Nalam Pathippagam books online, buy Asthma - Siddha Maruththuvam tamil book.
|
ஆஸ்துமாவுக்கு காரணம் மஸ்த் செல்கள்: ஆய்வில் தகவல்!
நுரையிரலில் உள்ள மஸ்த் செல்கள் உருவாக்கும் ரெனின் என்சைம்கள் காற்று செல்லும் பாதையை குறுகச் செய்வதால் ஈளை நோய் என்றழைக்கப்படும் ஆஸ்துமா நோய் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பால் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆஸ்துமா நோய் தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் வேய்ல் கார்னல் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர் அருள் வீரப்பன் தலைமையில் ஈடுபட்ட போது இதனைக் கண்டறிந்துள்ளனர். உடலில் நோய் எதிர்ப்பு நிலை ஏற்படும் போது நுரையிரலில் உள்ள மஸ்த் செல்கள் ரெனின் என்சைம்களை வெளியேற்றுகிறது. இது காற்று செல்லும் மென்மையான தசைப்பகுதிகளில் ஆஞ்சியோடென்ஸின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது.
இந்த ஆஞ்சியோடென்ஸின் காற்று செல்லும் மென்மையான பாதையின் தசைசுவர்களைக் கடினப்படுத்தி, காற்று செல்லும் பாதையை குறுகலாக்குகிறது என்பது தெரிய வந்ததாக மருத்துவர் அருள் வீரப்பன் தெரிவித்துள்ளார். உடலில் உள்ள எல்லா அவயங்களிரும் மஸ்த் செல்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. அலர்ஜி, அதிர்ச்சி, காயம் குணமடைதல் நடைமுறை, பேத்தோஜென்களிடம் இருந்து காத்தல் ஆகிய பணிகளை மஸ்த் செல்கள் மேற்கொள்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக எங்கள் குழுவினர் இதயத்தில் உள்ள மஸ்த் செல்கள், ரெனினை அங்கு வெளியேற்றுவதைகண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு இருதயத்துக்குள் உருவாகும் ரெனின் இதயத்தின் ஆர்கைத்திமாஸை தூண்டி ஆஞ்சியோடென்ஸின் உற்பத்தியை இதயத்துக்குள் உருவாக்குகிறது என்பதை அப்போது கண்டறிந்ததாக வேய்ல் கார்னல் மருத்துவ கல்லூரி மருந்தியல் துறை பேராசிரியர் மருத்துவர் ரோபர்ட்டோ லெவி கூறியுள்ளார்.
தற்போது இதே முறை நுரையிரலிலும் நடைப் பெறுவதைக் கண்டறிந்துஉள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுநீரகத்தில் ரெனின், உடல் இயக்கத்திற்குத் தேவையான அளவுக்கு மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது நீண்டகாலமாக அறிந்த ஒன்றுதான். ஆனால் உடலின் பல்வேறு பகுதியில் மஸ்த் செல்கள் தங்களுக்குத் தேவையான ரெனினை ஆங்காங்கே உற்பத்தி செய்துக் கொள்கின்றன என்பதை தங்கள் குழுவினர் தான் கண்டறிந்துள்ளதாக ரோபர்ட்டோ லெவி கூறியுள்ளார்.
இதயம், நுரையிரலில் ரெனின் உற்பத்தி அருகில் உள்ள திசுக்களில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுத் தொடர்பாக இன்னும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத் தொடர்பான நோய்களுக்கு மருந்துகளைக் கண்டறியும் போது ரெனின் என்சைம்களைகட்டுப்படுத்துவதற்கான மூலப்பொருட்களை சேர்க்க மருந்து கண்டுபிடிப்பாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் பேராசிரியர் ராண்டி சில்வர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்துமா நோய்க்குமருந்து
MEDICAN FOR ALLERGY ASTHMA?PLSSSSSSS